எத்தனை ஆயிரம் கோடி கடன் அடைக்கப்பட்டுள்ளது? கருணாநிதி |
ஜெயலலிதா ஆட்சியை விட்டு போகும்போது, தமிழக அரசின் கடன் 54000 கோடி.. அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி புரிந்த நீங்கள், தமிழகத்தில் தன்னிகரற்ற ஆட்சி நடத்திய நீங்கள், முத்தமிழ் வித்தகர் மட்டுமல்லாமல், நிர்வாக திறமை கொண்ட அரசியல் சாணக்கியரான நீங்கள், பல பெரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட நீங்கள், உங்கள் ஆட்சியில் எவ்வளவு கடனை அ(டி)டைத்தீர்கள்?? நீங்கள் ஆட்சியை விட்டு இறங்கும் பொழுது தமிழக கடன் 1 லட்சம் கோடிக்கும் அதிகம். மக்கள் துயரப்பட கூடாது என்பதற்காகவே, எதிலும் விலை ஏற்றாமல், கடன் மேல் கடன் வாங்கி ஆட்சி செய்ததாக கூறும் நீர், ஏற்கனவே நட்டத்தில் இயங்கிய போக்குவரத்து துறை, மின்சாரத்துறை என்று எல்லா துறை ஊழியர்களுக்கும் சம்பளத்தை பல மடங்கு கூட்டினீரே.. எதற்காக?? அரசாங்க ஊழியர்கள், எப்பொழுது பார்த்தாலும் உம்முடைய ஆட்சியில் மட்டும், ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்துகின்றனரே என்ன காரணம்?? நீர் வாங்கிய கடனுக்கெல்லாம் தமிழக அரசு, எவ்வளவு வட்டி கட்டுகிறது என்று மானோட மயிலோட நிகழ்ச்சியிலும், பாசாங்கு தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியிலும் மயங்கி கிடந்தால் எப்படி தெரியும்?? ஆட்சி புரிபவனுக்கு ஆட்சி கட்டிலின் அதிகாரமும், மேன்மையும் மட்டுமல்ல.. மக்களின் அன்றாட கஷ்டங்களும், மனநிலையும் தெரிந்திருக்க வேண்டும்.. ஏரியில் ஏற்படும் உடைப்பு சிறிதாக இருக்கும் பொழுதே அதை சிறு கற்களை சுமந்து சென்று அடைத்து விட வேண்டும். உடைப்பு பெரிதாகி விட்டபின் பெரும் பாராங்கல்லை சுமந்து சென்றால் உடைப்பை அடைக்கும் முன்னர் நம் நெஞ்சு அடைத்து விடும். அதுதான் இப்போது நடக்கிறது.. இதில் கயவன் யார்?? உமது பேரன், கனிமொழி மகன் ஆதித்யா முதலாளியாக உள்ள ஆதித்யா தொலைக்காட்சி பார்க்கும் சிறு குழந்தைகளுக்கெல்லாம் தெரியும்... உமக்கு தெரியாது.. நீர்தான் மங்குனி அமைச்சர்களை எல்லாம் ஒன்றாக வைத்து கொண்டு ஆட்சி செய்தீரே... மாமங்குனி (முன்னால்) முதலமைச்சரே
கருத்து பாராட்டுகள் வாசகர் திரு mano - trichy
கருத்து பாராட்டுகள் வாசகர் திரு mano - trichy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக