07 டிசம்பர் 2012

அதுக்கும் இதுக்கும் முடிச்சு போடாதே? மென்டல் பயலுக‌


சச்சின் 'ஷூ லேஸைக்' கட்டக் கூட யாருக்கும் தகுதி கிடையாது- ரவி சாஸ்திரி 'லூஸு'ப் பேச்சு!
சச்சின் டெண்டுல்கருக்கு மாற்றான, இணையான வீரர் நிச்சயம் நம்மிடம் இல்லை. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து எனக்குக் கவலையில்லை. ஆனால் சச்சினுக்கு மாற்று வீரர் இப்போதைக்கு நம்மிடம் இல்லை. ஏன், அவரது ஷூ லேஸைக் கட்டக் கூட தகுதியானவர்கள் நம்மிடம் இல்லை.


27 அக்டோபர் 2012

சபாஷ் சரியான வார்த்தை...

மின் தட்டுப்பாட்டை தீர்க்க எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள, முதல்வர் ஜெயலலிதா அக்கறை காட்டவில்லை.

 இந்த வாய்ப்புக்களை நீங்கள் ஏன் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுதிகொள்ளவில்லை? பயன்படுத்த தெரியலையா? இல்லை திறமை இல்லையா? ஐந்து ஆண்டுகளில் ஒரு வாய்ப்புக்களை கூட பயன்படுத்த நேரம் இல்லையா? அணைத்து வாய்ப்புக்களையும் மானாட மயிலாட, நமீத்தா குத்தாட்டம் பார்க்க செலவு செய்தீரா? உங்களுக்காவது பரவாயில்லை, மத்திய அரசு ஆதரவு என்கிற அறிய வாய்ப்பு மிக பலமாக உள்ளது, இவருக்கோ அது சுத்தமாக இல்லை அதனால் அவதி படுகிறார், திட்டு வாங்குகிறார், இந்த வாய்ப்பு உங்களுக்கு இருந்தும், இப்போவும் இருக்கிறது, ஏன் அந்த வாய்ப்பை பயன்படுத்த வில்லை? இந்த வாய்ப்பை குடும்பத்திற்கு பதவி வாங்க மட்டும் பயன்படுத்த தெரிந்த உமக்கு மின்சார பிரச்னையை நிரந்திரமாக ஏன் தீர்க்கவில்லை? 

அவராவது இந்த விளக்கத்தை கொடுத்தார், இதே நிருபர்கள் உங்களிடத்தில் கேட்ட போது என்ன சொன்னீர்கள்? மற்ற மாநிலத்திலேயும் மின்வெட்டு உள்ளது, தமிழகத்தில் கம்மி, நான் கிளம்பனும் பாராட்டு விழாக்கு என்று பாராட்டு விழாக்கு கிளம்பி சென்றது நியாபகம் உள்ளதா? முதல்வர் இந்த விளக்கத்தை கொடுத்தது, உங்கள் சூழ்ச்சியை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதற்காக. அது சரி, ஜெயலலிதாவின் கோரிக்கையை பிரதமர் நிச்சயம் பரிசீலிப்பார் என்று கூறிவிட்டு நாராயணசாமி உங்களை வந்து சந்தித்த பிறகு, மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் தர முடியாது என்று மத்திய அரசு கூறியதே, அப்படி என்றால் என்ன அர்த்தம் மிஸ்டர் மஞ்ச துண்டு?

 அதையும் நீங்களே கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஒன்று சொல்லுகிறேன், மின்வெட்டு இருப்பது உண்மை தான், மக்கள் எதிர்ப்பு இருப்பது உண்மை தான், அதற்காக மக்கள் உமக்கு வாக்களித்து MP க்களை கொடுப்பார் என்று நீங்கள் நினைத்தீர்களானால் மட தனம் என்று தான் சொல்லவேண்டும். இப்போது மக்களுக்கு இந்த மின்வெட்டு யாரால் ஏற்படுத்தப்பட்டது, உங்கள் MP க்கள் மத்தியில் என்ன செய்கிறார்கள்? மத்திய அரசு ஏன் மின்சாரம் தர மறுக்கிறது என்ற கேள்வி தான் மக்களிடத்தில் உள்ளது. இந்த கேள்விக்கான பதில்களை வரும் பாராளுமன்ற தேர்தலில் உங்களுக்கு தோல்வியாக கொடுப்பார்கள் பாரு, அப்போது தெரியும், இப்போது உள்ள மக்களை 60 70 களில் ஏமாற்றியது போல ஏமாற்ற முடியாது என்று.

19 அக்டோபர் 2012

நிஜமாகவே தற்போதைய முதல்வருக்கு ஒரு நல்ல ஆலோசனை குழு ஒன்று உள்ளதாகவே கருதுகிறேன்... ஏனென்றால்.... இன்னும் ஐந்து வருடம் கழித்து (ஒரு வேளை) திமுக மீண்டு (ம்) வந்தால் அவர்கள் திரும்பவும் இந்த கட்டிடத்தை சட்டமன்றமாக மாற்ற தலைகீழாக நிற்பார்கள். இதை ஒரு பல்கலை கழகமாகவோ அல்லது ஒருங்கினைந்த அரசு அலுவலகங்கலாகவோ மாற்றினால் எப்படியும் அதை காலி செய்துவிட்டு சட்டமன்றமாக மாற்றத்தான் செய்வார்கள். ஆனால் உங்களுக்கே தெரியும் அரசு மருத்துவமனைகள் வருடம் ஆக ஆக எப்படி மாறும் என்று...இரண்டாவது மற்ற அலுவலகங்களை போன்று மருத்துவமனைகளை சட்டென்று காலிசெய்ய முடியாது..பல நூறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது... மேலும் அதை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டுமென்றால்..குறைந்தது ஒரு வருடம் வேண்டும்... கார்னர் பண்ணுறதுன்ன என்னன்னு இப்பதான் தெரிஞ்சுது...கருனாநிதியால வேற எதுவும் செய்ய முடியாது இப்போ...அதனால தான் அம்மா சரணம் ன்னு சொல்லி சரண்டர் ஆயிட்டார்.. ..