19 மார்ச் 2012

அவாஸ் அங்கிங் தி.மு.க?

கேள்வி: மத்திய பட்ஜெட்டினை பற்றி உங்களுடைய கருத்து என்ன?


பதில்: பிரணாப் முகர்ஜி என்னுடைய நெடு நாள் நண்பர். பட்ஜெட் என்றாலே நிறை குறைகள் இருக்க தானே செய்யும்..கழகம் இந்த பட்ஜெட்டினை வரவேற்கிறது...அதே வேளையில் பட்ஜெட்டில் உள்ள வரி உயர்வினை பற்றிய கழகத்தின் நிலைப்பாட்டினை செயற்குழு தான் கூடி முடிவெடுக்கும்

கேள்வி: இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டினை...

பதில்: (கோபத்தில் இடைமறித்து) இதை ஏன் என்னிடம் மட்டும் கேட்கிறீர்கள்...அம்மையார் நினைத்தாலும் மத்திய அரசினை நிர்பந்திக்கலாம் அல்லவா...

கேள்வி: இருந்தாலும் நீங்கள் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி....பதில்: என் மகளையே 6 மாதம் உள்ளே வைத்து விட்டார்கள் என்றால் நானும் ஒரு அடிமை தான் என்ற 2009ல் நான் கூறிய கூற்று மெய்யாய் போனது தானே உண்மை..நம் பிரதமர் தமிழர்கள் நலனில் தனி கவனம் செலுத்தி வருகிறார்..சோனியாவும் தமிழர்கள் விஷயத்தில் மிகவும் அக்கறை உடையவர்...அவர்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

கேள்வி: நல்ல முடிவு என்றால் தீர்மானத்தை எதிர்ப்பார்கள் என நம்புகிறீர்களா?

பதில்: தம்பி..ஏனய்யா என்னை சிக்கலில் மாட்டிவிட பார்க்கிறீர்..நல்ல முடிவு என்றால் உமக்கு எது நல்லதோ அது..அவர்களுக்கு எது நல்லதோ அது...அவர்களுக்கு நல்லதாக படுவது உமக்கு நல்லதாக படவில்லை என்பதற்கு கழகம் பொறுப்பேற்காது....(அருகில் உள்ள துரைமுருகன்(மனதுக்குள்): உஷ்...உஷ்...ரொம்ப கண்ண கட்டுதய்யா..நான் தான் ஆயுட்கால அடிமை 40 வருட சர்வீஸ்....இந்த கொடுமைகளை பார்த்து சகித்து பழகி விட்டது..உங்களுக்கு ஏனய்யா இந்த கொலவெறி...)

கேள்வி: அய்யா..கடைசியாக ஒரு கேள்வி...நீங்கள் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவினை விலக்கி...

பதில்: (மீண்டும் இடைமறித்து) யோவ்..இந்த கேள்வியையும் ஏனய்யா என்னிடம் மட்டும் கேட்கிறீர்கள்..போய் மம்தாவிடமோ சரத்பவாரிடமோ ஏன் முலாயம் சிங்கிடமோ கேட்க வேண்டியது தானே..ஒரு திராவிடன் மத்திய அரசில் அங்கம் வகிப்பதை உங்களால் பொறுக்க முடியவில்லை...தொடர்ந்து இந்த மாதிரி கேள்விகள் என்னிடம் கேட்டால் நான் டீ குடித்து விடுவேன்... (அனைவரும் போனதற்கு அப்பறம் மனதுக்குள்...திமுக., தலைவா....பி.பி.சி., சி.என்.என்., போபர்ஸ் போன்ற உலக புகழ் பெற்ற மீடியாக்கள் எல்லாம் கூட்டாக வந்து உன்னை டபாய்க்க பார்த்தால் கூட உன்னை ஒன்னும் செய்ய முடியாதப்பா..இத இப்படியே மெய்டன் பண்ணுப்பா...)

கருத்துகள் இல்லை: