13 ஏப்ரல் 2011

16 வயதினிலே ஸ்ரீதேவி கணக்கா ஸ்லோ மோஷன்ல வந்து உங்களுக்கு ஒட்டு போடுவாங்க என்று நினைப்பா?


"ஒவ்வொரு ஊரிலும் என்னால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்கள் பாராட்டிய போது, எனக்கு நானே மதிப்பெண் போட்டுக் கொண்டேன்.ஆனால், மக்கள் மதிப்பெண் வழங்க வேண்டிய நாள் இன்று அல்லவா? "

உங்களுக்கு நீங்களே பாராட்டிகொள்வது, உங்களுக்கு நீங்களே பெருமிதம் அடைவது, உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டு, பதில் கொடுப்பது, உங்களுக்கு நீங்களே மதிப்பெண் போடுவது உங்களுக்கு சொல்லியா தரனும்? கை வந்த கலை ஆச்சே? அப்படியா எங்கு பார்த்தாலும் எழுச்சியா? அப்போ ஏன் மக்கள் காலில் விழுந்தீர்கள்? சேவகனாக இருக்க வாய்ப்பு தாருங்கள் என்று கெஞ்சிநீர்கள்? இப்படியெல்லாம் தேர்தல் நேரத்தில் உருக்கமாக பேசினால் உடனே கைப்புள்ள சொன்னது மாதிரி 16 வயதினிலே ஸ்ரீதேவி கணக்கா ஸ்லோ மோஷன்ல வந்து உங்களுக்கு ஒட்டு போடுவாங்க என்று நினைப்பா? இப்போ இவ்வளவு உருக்கமா பேசுற நீங்க..., நாங்க அன்றைக்கு வெங்காயம் விலை ஏறிடிச்சு கேட்டால், பெரியார் கிட்ட போய் கேளு, தமிழ்நாட்டுல கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடக்குதுனு சொன்னா, மற்ற மாநிலத்தை விட இங்க கம்மியா தான் நடக்குது, விலை வாசி உயர்ந்து போச்சு என்றால், வாங்கும் திறன் உயர்ந்து போச்சுனு சொல்லுறது, பண்டிகை கொண்டாட முடியல என்றால், பாண்டி பஜார்ல போய் பாருனு எகத்தாளமா பேசுறது, மீனவர்கள கொன்னுட்டாங்க என்றால், பேராசை புடிச்சு அலையாத நக்கல், பெட்ரோல் விலை உயர்ந்துவிட்டது என்றால், வண்டியே வாங்காத, போலி மருந்து என்றால், அது ஒன்னும் பண்ணாது, வாங்கி தின்னு எப்படியெல்லாம் எங்கள எகத்தாளம பேசின, இப்போ மக்கள் உங்களுக்கு மார்க் போடும் நேரம் வந்துவிட்டது, நீங்கள் பேசிய ஏகதாள பேச்சுக்கு பொறுமையாக தேர்தலுக்காக காத்திருந்தார்கள், உங்கள் கூட்டணிக்கு ஜீரோ மார்க் தான் போடுவார்கள் மக்கள்..

ஒரு ஏழையாகச் சென்னைக்கு வந்த நீங்கள் ஆசியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகி விட்டீர்கள்.உங்களுக்கு ஓட்டுப் போட்ட மக்கள் மட்டும் இன்னமும் ஏழைகளாகவே இருப்பது ஏன் ..??

கருத்துகள் இல்லை: