28 மார்ச் 2009

அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா?

1) பிறப்பு சான்றிதல், இறப்பு சான்றிதல், சாதி சான்றிதல் என எல்லா மக்களிடமும் சுரண்டிப் பிழைத்த லஞ்ச லாவன்யா அரசு அலுவலர்களுக்கு ஆப்பு
2) பலரைக் கொன்ற கொள்ளையனைப் பிடிக்க நடவடிக்க
3) தகிடுதத்தம் செய்யும் சாமியார்கள் மீது நடவடிக்கை
4) பாண் பராக், லாட்டரி ஒழிப்பு
5) ஜெயா ஆட்சியில் மதக் கலவரம் சாதிக் கலவரம் இல்லை
6) ஜெயா ஆட்சியில் ரவுடிகள் அடங்கி ஒடுங்கி இருந்தனர்
7) ஒரே நாளில் மணல் வாருவதை அரசாங்கத்தின் வசம் கொண்டு வந்தார்.
8)மழை நீர் சேகரிப்பு திட்டம்

இது நாள் வரையில் தமிழ் வார்த்தைகளை வைத்து விளையாடி, பெரிய வீரரைப் போல, தியாகியைப் போல பேசி , எழுதி வந்தார். உடன் பிறந்த சகோதரர்கள் பொருளாதாரம் உயர்வதுதான் நமது தமிழர் பண்பாடு! ஆனால் மாமன் மகன் என்றாலும் கணக்கு வழக்கு சரியாக இருக்க வேண்டும். இல்லன்னா மதுரை-யை எரித்து விட வேண்டும். ஒரு லட்சம் கோடி என்றாலும் அது நமது குடும்பத்துக்கு தான்; உடனாவது -- பிரவாவது? பன்னீர் தெளிப்பது எல்லாம் ஒரு பிழைப்பா? ஒரு கவியரங்கம் நடத்தலாம்; திரை உலகினர் நமக்காக ஒரு பாராட்டு விழ நடத்தலாம்; அட, ஒரு சங்கமேமே நடத்தி மக்கள் பணத்தில் சமைக்கலாம் ஐயா!

தான் ஆட்சியில் இருக்க வேண்டும், தன் நட்ப்புக் கட்சி மைய அரசில் இருக்க வேண்டும்.இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார் கலைஞர்.

ஆனால் மக்கள் இப்போது புரிந்து கொண்டு விட்டனர். சாயம் வெளுத்து விட்டது.

ஜெயலலிதா மிகச்சிறந்த அரசியல் வாதியோ மிகசிறந்த நிர்வாகியோ இல்லைதான். ஆனால் முடிவு எடுப்பதும் அதனை செயல்படுத்தும் வேகமும் அவரிடம் அதிகம். தற்போது உள்ள சூழலில் இவரைப்போன்றவர்தான் இங்கு தேவை; பல "மேதைகள்" பல "நிபுணர்கள்" பிரதமராக இருந்து ஒன்றும் "பிரட்டி" விட வில்லை, சசிகலா கூட்டத்தை விரட்டிவிடாலே போதும் எல்லாம் சரியாகிவிடும் ஜெ. . ஒரு சிறந்த. நிர்வாகியாக எதிர்பார்கலாம்.

அத்தைக்கு மீசை முளைத்தால் தானே சித்தப்பா?

கருத்துகள் இல்லை: