மக்களுக்கு பயனளிக்கும் அரசு கேபிள் டிவி சட்டம் கொண்டுவந்ததும் அவசரமாக கவர்னரை சந்திக்க ஓடிய ஓட்டம் என்றாவது காவிரி, ஈழப் பிரச்சனைகளுக்காக ஓடிய துண்டா? பதவிக்கு வந்ததும் அரசு கேபிள் சட்டம் ரத்து, அழகிரியை மிரட்டியதும் மீண்டும் அதே சட்டம், இப்போ ஒரு கூடி கொள்ளை அடிக்க அந்த சட்டம் கிடப்பில். அரசு அறிவிப்பின் படி கடந்த ஆகஸ்ட் முதல் தமிழ்கள் முழுவதும் அரசு கேபிள் செயல் படவேண்டும். செயல் படுகிறதா?கடைசியாக, உங்கள் சொத்து கணக்கை பொதுமக்களுக்கு வெளியிட முடியுமா? ஆசிய பணக்கார குடும்பங்களில் முதல்?
மதுரையில் 3 உயிர்களை எரித்த கையேடு சென்னையில் அரசு மரியாதையுடன் கலைஞர் 50ஆண்டுகள் பொன்விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அழகிரி,,காடுவெட்டி குரு ஜனவரியில் பேசிய பேச்சுக்கு மே மாதம் கைது (அவர் பேசிய தமிழ் தமிழினத் தலைவருக்கு புரிய வில்லை). அதுவும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில். பிறகு காங்கிரஸ் ஆட்சியில் பங்கு என்றதும் மீண்டும் பமாக விற்கு அழைப்பு, குரு விடுதலை.10மணிநேர மின்சார விடுப்பு... ஆட்சிக்கு வந்தவுடன் அவசரமாக கேபிள் டிவி சட்டம் திரும்ப பெறுதல். பிறகு மீண்டும் அந்த சட்டம். இப்போது காணாமல் போன சட்டம்!!
பீஹாரில் கூட இப்படி நடந்ததில்லை சட்டம் ஒழுங்கு பல்லிளித்த நேரம்: மதுரை எரிப்பு, சென்னை சட்டக் கல்லூரி மோதல், சென்னை உயர்நீதிமன்ற மோதல், கோவை சட்டக் கல்லூரி எரிப்பு, தமிழகத்தில் எரிக்கப்பட்ட பேருந்துகள், ரயில்கள்.........
நான்கு புதிய தொலைக்காட்சிகள் தொடங்கி இருக்கிறோம். சிரிப்பொலி மற்றும் தினம் விடும் அறிக்கைகள் மூலமாக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து இருக்கிறோம். சன் குழுமத்தின் மூலமாக 10 க்கும் மேற்பட்ட படங்களை 4 மாத காலத்திற்குள் எடுத்து தமிழர்களின் வளர்ச்சிப் பாதைக்கு உதவி இருக்கிறோம்.
தமிழர்கள் மனம் உடைந்து விடாமல் இருக்க டாஸ்மாக் கடைகளை அங்கங்கே திறந்து கண்ண தாசன் சொன்னது போல "கோப்பையிலே தமிழன் குடியிருப்பு" என்று சொல்ல வைத்ததை விட வேறு சாதனைகளையும் பட்டியலிடத் தான் வேண்டுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக