22 மார்ச் 2009

ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்

எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வெற்றியானது இயற்கையானது, இமயம் போன்றது. அப்படிப்பட்ட வெற்றியை எட்டிப்பிடிக்க முயன்றவர்கள் சறுக்கி விழுந்து விட்டனர்.
ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணி என்பதே அ.தி.மு.க.வின் குறிக்கோள். நாம் தொய்வின்றி மக்கள் பணியாற்றி துணிச்சலாக செயலாற்ற வேண்டும். அவ்வாறு துணிந்து செயல்படுபவர்களுக்குத்தான் வெற்றி கிட்டும். நாளைய வெற்றி நமக்காகக் காத்திருக்கிறது.
பேரறிஞர் அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கருணாநிதியின் அராஜகங்களை, வன்முறை வெறியாட்டங்களை, நிர்வாகத் திறமையின்மையை மக்கள் முன் எடுத்து வைத்து துணிச்சலுடன் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை பறிப்போம்.
கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம். அதிமுக ஆட்சியை விரைவில் மலரச் செய்வோம் என்று சூளுரை ஏற்போம்.

கருத்துகள் இல்லை: