எந்த ஆட்சி வந்தாலும், இருக்கும் நிதி நிலமைகளை பொறுத்து, மிக குறைந்த அளவிலேயே மின்சக்தியை உற்பத்தி பண்ண முடியும் என்று உணர தெரியாதவர்கள் நம் நாட்டில் அதிகம்...
கருணாநிதி ஐந்து வருடம் செய்யாததை ஜெயலலிதா ஆறே மாதத்தில் செய்து முடிக்க , இவர்கள் எதிர்பார்த்தால் , அது நடக்குமா...? சும்மா விதண்டாவாதம் பேசி பயன் இல்லை....அடுத்தவனை குறை சொல்வதற்கு முன் நம்மால் மின் சிக்கனம் எப்படி கடை பிடிக்க முடியும் என்று தான் யோசிக்க வேண்டும்....
கருணாநிதி ஐந்து வருடம் செய்யாததை ஜெயலலிதா ஆறே மாதத்தில் செய்து முடிக்க , இவர்கள் எதிர்பார்த்தால் , அது நடக்குமா...? சும்மா விதண்டாவாதம் பேசி பயன் இல்லை....அடுத்தவனை குறை சொல்வதற்கு முன் நம்மால் மின் சிக்கனம் எப்படி கடை பிடிக்க முடியும் என்று தான் யோசிக்க வேண்டும்....
சென்னையில் உள்ள ஒருவர் 24 மணி நேரமும் CENTRALIZED AC யில் ஹாயா இருக்க, பக்கத்து புற நகரில் XEROX கடை வைத்து பிழைக்கும் ஒருவன் வியாபாரம் செய்ய முடியாமல் , மக்களும் XEROX கூட நினைத்த நேரத்தில் எடுக்க முடியாமல் தவிப்பது தான் இன்றைய தமிழகத்தின் நிலை....ஜெயலலிதா ஒன்றும் மேஜிக் குச்சி வைத்திருக்க வில்லையே....சீபூம்பா ...மின்சாரமே வா...என்று சொன்னவுடன் விளக்குகள் எரிய....மின்சார வாரியமே நஷ்டத்தில் இயங்கும் போது, எப்படி மின்வாரிய பணிகளை ஏற்படுத்துவது....?
அரசு போர்கால அடிப்படையில் மின்சார சிக்கனத்தை வலியுறத வேண்டும்...ஒரு கூடங்குளம் பத்தாது....பத்து கூடன்குளமாவது தமிழ்நாட்டுக்கு தேவை......உடனடி நடவடிக்கைகளாக அரசு கீழ் வருபவனவற்றை செய்யலாம்....
1 . வீடுகளில் , கிராமங்களில் குண்டு பல்புகள் தான் பிரதானம்....அவற்றுக்கு பதிலாக 14 W பல்புகளை உடனடியாக இலவசமாக கொடுக்க வேண்டும்...
2 . மின்பற்றாக்குறை நீங்கும் வரை மிக்சி, கிரைண்டர் போன்ற இலவசங்களை தடை செய்ய வேண்டும்...
3 . சென்னை, போன்ற நகரங்களில் மால், தியேட்டர்கள், கடைகள் போன்றவை அலங்கார விளக்குகளால் சொர்க்க பூமியாக ஜொலிக்கின்றன .அதனை தடை செய்ய வேண்டும்...
4 . AC உபயோகிப்பவர்கள் யார் என்று கண்டறிவது மிக சுலபம்...அவர்கள் வீடு அல்லது ஆபிசுகளுக்கு மட்டும் மின் கட்டணத்தை மிக கடுமையாக உயர்த்த வேண்டும்....
சிறு துளி பெரு வெள்ளம்...AC பயன்பாட்டை குறைக்கும் போது நிச்சயம் மின் தேவை குறையும்... சாதரணமாக AC இல்லாத வீடுகளில் மின் கட்டணத்தை மிக சிறிது அளவே உயர்த்த வேண்டும்....
5 . மின் திருட்டை உடனடியாக கட்டு படுத்த வேண்டும்.....இவையெல்லாம் உடனடியாக செய்ய வேண்டியவை.....
நீண்டகால பணிகளாக
1 . சோலார் மின் உபகரனகளை , ஒவ்வொரு வீட்டு மொட்டை மாடியிலும் அரசே அமைத்து தரலாம்..20 லட்சம் வீடுகளுக்கு அமைத்து கொடுத்தால் கூட ஒரு வீட்டுக்கு நிறுவுதல் மற்றும் ஐந்து வருட பராமரிப்பு செலவு என்று பார்த்தல் 2 லட்சம் ஒரு இணைப்புக்கு என்று கணக்கிட்டால் மொத்தம் 40000 கோடி வருகிறது..?
இது சாத்தியமா? நிச்சயம் சாத்தியம்...ஒரு வருடத்துக்கு 10000 கோடி இலவசத்துக்கு தமிழ்நாட்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது....அந்த நிதியை அப்படியே , சூரிய மின் உபகரணங்கள் அமைக்கும் திட்டத்துக்கு செயல் படுத்தினால் நான்கே வருடங்களில் , மின்மிகை மாநிலமாக , தமிழகத்தை உருவாக்கலாம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக