'நா' வறண்டு போகும் அளவுக்கு, 'நா' வன்மையால் பேசினார்கள். நாட்டை, ஊழல் மயமாக்கி, உலகத்துக்கு தங்களை வெளிச்சம் போட்டு காண்பித்தார்கள். இல்லாத வாக்குறுதிகளை அள்ளி வீசி, காமராஜரின் காங்கிரசை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். கட்சியின் ஒற்றுமை உணர்வை சீர்குலைத்து, திமுகவை பல துண்டுகளாக்கி அரசியல் கடை விரித்தார்கள் .பதவியை பயன் படுத்தி, பணம் பண்ணினார்கள். இவர்களது பேச்சை கேட்டு , தேன் குடித்த நரிகளாக மக்கள் மதி மறந்தார்கள். நாடு, நாசமானது
பேசி பேசியே தமிழ்நாட்டை கெடுத்தவர்கள்' என்ற முத்திரை, தமிழக வரலாற்றில் திமுக வுக்கு உண்டு. வார்த்தை ஜாலங்களில் மயங்கி, இனியும் மக்கள் அவர்களிடம் நாட்டை அடகு வைக்க தயாராக இல்லை. தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ் அரசால், இவரது கட்சி மந்திரி ஜெயிலுக்குள் போன பிறகும், சுயநலத்துக்காக அவர்களோடு சேர்ந்து கொண்டு வாக்கு சேகரிக்கிறார். என்னே, அதி புத்திசாலித்தனம்! 'மக்கள் நலம், மக்கள் நலம் என்றே பேசுவார். தம் மக்கள் நலம் ஒன்றே தான் தன் மனதில் எண்ணுவார்.' என்ற பாடல், இவருக்கு நன்கு பொருந்தும். இந்த தேர்தலில் சரியான பாடம் கற்று தர, மக்கள் தயாராகி விட்டார்கள்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக