22 ஜூலை 2009

கடவுள் நல்லவரா? சந்தேகமேயில்லை

அறிவியலுக்கு அனைத்திற்குமே ஆதாரம் வேண்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றி உங்களுக்காக நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் சிறிய வயது பள்ளிக்கூட விவாதம் ஒன்றை வழங்குகின்றேன். (இந்த விவாதம் இணையத்திற்கு வந்து வெகு நாட்களாகிவிட்டது. இது அவரது பள்ளியில் ஒரு ஆசிரியருக்கும் அவருக்குமிடையே நிகழந்த வாதம்.)

ஆசிரியர்: ஆக, கடவுள் இருப்பதை நீ நம்புகின்றாயா?

கலாம்: கண்டிப்பாக ஐயா

ஆசிரியர்: கடவுள் நல்லவரா?

கலாம்: சந்தேகமேயில்லை

ஆசிரியர்: கடவுள் அனைத்து சக்திகளும் பெற்றவரா?

கலாம்: ஆமாம்.

ஆசிரியர்: என்னுடைய தம்பிக்கு புற்றுநோயால் மரணம் வந்தது. அவன் கடவுளை மிகவும் நேசிப்பவன். கடவுளிடம் ஓயாமல் பிரார்த்தித்திருந்தான். நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாதவருக்கு நம்மாலான உதவிகளை செய்வோம். அப்படி செய்யாத எல்லாம் வல்ல கடவுள் நல்லவரா?

கலாம்: (மெளனம்)
ஆசிரியர்: உன்னால் பதில் சொல்ல முடியவில்லை இளைஞனே அப்படித்தானே? நாம் மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம். கடவுள் நல்லவரா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: சாத்தான் நல்லவனா?
கலாம்: இல்லை.

ஆசிரியர்: சாத்தான் எங்கிருந்து வந்தான்?

கலாம்: (தயக்கத்துடன்) கடவுளிடமிருந்து

ஆசிரியர்: ரொம்ப சரி. இந்த உலகத்தில் கெட்டது இருக்கிறதா?

கலாம்: ஆமாம்.
ஆசிரியர்: கெட்டது எங்கும் நிறைந்திருக்கிறது இல்லை?

கடவுள்தானே அனைத்தையும் படைத்தார்?

கலாம்: ஆமாம்
.
ஆசிரியர்: ஆக, கெட்டவற்றை படைத்தது யார்?

கலாம்: (பதிலில்லை)

ஆசிரியர்: இந்த உலகத்தில் உடல்நிலைக் கோளறுகள், ஒழுக்கமின்மை, பழியுணர்ச்சி, மோசமான நிலை என அனைத்தும் உள்ளது தானே?

கலாம்: ஆம் ஐயா.

ஆசிரியர்: அப்போ, யார் இதையெல்லாம் உருவாக்கியது?
கலாம்: (பதிலில்லை)

(இங்கிருந்து கவனமாக படியுங்கள்)

ஆசிரியர்: உன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை உணர்ந்து பார்க்க ஐந்து அடிப்படை உணர்வுகள் வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. நீ கடவுளை கண்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளின் குரலை கேட்டிருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: எப்போதாவது கடவுளை தொட்டிருக்கிறாயா, இல்லை ருசித்துப் பார்த்திருக்கின்றாயா அல்லது மோப்பம் பிடிப்பதுபோல் முகர்ந்தாவது இருக்கிறாயா? ஏதேனும் ஒரு உணர்ச்சியில் கடவுளை உணர்ந்திருக்கின்றாயா?

கலாம்: இல்லை ஐயா

ஆசிரியர்: அப்படியிருந்தும் கடவுளை நீ இன்னமும் நம்புகின்றாயா?

கலாம்: ஆம்.

ஆசிரியர்: ஆக, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உனது கடவுள் இல்லை என்று கூறுகிறது. நீ அதற்கு என்ன பதில் தருவாய் மகனே?

கலாம்: ஒன்றுமில்லை ஐயா. எனக்கு நம்பிக்கை மட்டும் உள்ளது.

ஆசிரியர்: ஆம் நம்பிக்கை. அறிவியலுக்கும் அதற்கும் நிறைய பிரச்சினை இருக்கிறது.

கலாம்: ஐயா, வெப்பம் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: அப்படியென்றால் குளிர் இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம்.

கலாம்: இல்லை ஐயா, குளிர் என்பது இல்லை.(மாணவர்கள் இதுவரை சுவாரசியம் காட்டாமலிருந்தவர்கள் இப்போது இருவரையும்கூர்ந்து கவனிக்கின்றார்கள்)

கலாம்: ஐயா, நம்மிடம் பல்வேறு வகைப்பட்ட வெப்பம் இருக்கிறது, மிகு வெப்பம், தாழ் வெப்பம், குறைந்த வெப்பம், வெள்ளை வெப்பம், மிகப்பெரிய வெப்பம் அல்லது வெப்பமே இல்லை என்று. ஆனால் குளிர் என்ற ஒன்று கிடையாது. நம்மால் பூஜ்ஜியத்திற்கும் கீழே 458 டிகிரி வரை (வெப்பமே இல்லை) போக முடியும் அதற்கு மேல் அளவு இல்லை. குளிர் என்ற ஒன்று கிடையாது. குளிர் என்பது வெப்பம் இல்லாமையைக் குறிக்கும் ஒரு சொல் அவ்வளவே. குளிர் என்பது வெப்பத்தின் எதிர்ப்பதம் இல்லை வெப்பத்தின் தன்மை இல்லாமை அவ்வளவே.

கலாம்: சரி ஐயா, இருளைப் பற்றி கேட்கலாம். இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர்: கண்டிப்பாக. இருள் இல்லையென்றால் இரவு என்பது எப்படி இருக்கும்?

கலாம்: மறுபடியும் தவறு ஐயா. இருள் என்பது வெளிச்சம் இல்லாமை. உங்களால் குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பளிச்சிடும் வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம் என்று வரையறுக்க முடியும். ஆனால் வெளிச்சமே இல்லாததை? அதைத்தான் நீங்கள் இருள் என்று கூறுகின்றீர்கள் இல்லையா? இருளை இன்னமும் இருண்டுபோக உங்களால் செய்யமுடிந்தால் செய்வீர்கள்தானே?

ஆசிரியர்: என்ன சொல்லவருகின்றாய் மகனே?

கலாம்: நான் கூற வருவது உங்களின் அறிவியல் கூற்றில் பிழையிருக்கிறது என்பதுதான்.

ஆசிரியர்: என்ன பிழை? விளக்கமாக சொல் பார்க்கலாம்?

கலாம்: ஐயா, உங்களின் அறிவியல் இருமை தத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. நீங்கள் வாழ்வும் சாவும் இருக்கிறது நல்ல கடவுள் கெட்ட கடவுள் என்று இருக்கிறதாகவும் வாதிடுகிறீர்கள். கடவுள் என்கிற விஷயத்தை நீங்கள் ஒரு ஆதாரபூர்வ (அளவெடுக்க முடிகின்ற) முடிவுபெற்ற விஷயமாக எதிர்பார்க்கின்றீர்கள். ஐயா, அறிவியலால் மனிதர்களின் எண்ணத்தை விளக்க முடியவில்லை. மின்சாரத்தையும் காந்தத்தையும் வைத்துதான் அளவிடுகிறது. ஆனால் இந்த இரண்டில் ஒன்றையும் அது உண்மையில் பார்த்ததோ முழுதுமாக புரிந்துகொண்டதோ இல்லை. இறப்பு என்பதை உயிரின் எதிர்ப்பதமாக பார்ப்பது இறப்பு என்பது ஒரு தனிப்பட்ட பொருளாக இருக்க முடியாது என்பதை மறந்துவிட்டுக் கூறுவது. இறப்பு என்பது உயிரின் எதிர்ப்பதம் இல்லை ஐயா, இறப்பு என்பது உயிரில்லாதது அவ்வளவே. இப்போது என் கேள்விக்கு விடைதாருங்கள் ஐயா. உங்களின் மாணாக்கர்களுக்கு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று பாடம் நடத்துகின்றீர்கள் அல்லவா?

ஆசிரியர்: மனிதன் உருவான விதம் பற்றிய டார்வின் கூற்றைப் பற்றி நீ கூறுகின்றாய் என்றால் ஆம் நான் அதை நடத்துகின்றேன்.

கலாம்: மனிதன் உருவான விதத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கின்றீர்களா?(ஆசிரியர் விவாதம் எங்கே போகின்றது என்பதை உணர்ந்து புன்சிரிப்புடன் தலையாட்டிக்கொள்கிறார்)

கலாம்: ஆக இதுவரை எவரும் மனிதன் உருவான விதத்தை ஆதாரபூர்வமாக கண்டதில்லை. அதுமட்டுமின்றி உயிரியல் மாற்றம் என்பது இன்னமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற ஒன்று என்பதையும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆக நீங்கள் உங்களின் கருத்துக்களைத்தான் பாடமாக நடத்துகின்றீர்கள் அப்படித்தானே? நீங்கள் ஆசிரியரா விஞ்ஞானியா?(வகுப்பு முழுவதும் சலசலக்க ஆரம்பித்துவிடுகிறது)

கலாம்: இந்த வகுப்பில் இருக்கும் எவரேனும் நமது ஆசிரியரின் மூளையை பார்த்திருக்கின்றீர்களா?(வகுப்பில் இப்போது சிரிப்பலை ஆரம்பித்துவிட்டது)

கலாம்: இங்கே இருக்கும் எவரேனும் ஆசிரியரின் மூளையை கண்டோ, கேட்டோ, தொட்டோ, உணர்ந்தோ அல்லது ருசித்தோ இருக்கின்றீர்களா? எவரும் அவ்வாறு செய்திருப்பதாக தெரியவில்லை. ஆகவே ஐயா, அனுபவத்திலிருந்தும், ஆய்வுகளிலிருந்தும், சோதனை நடத்திக் காட்டக்கூடிய வழிகளிலிருந்தும் அறிவியல் உங்களின் மூளை இல்லையென்று கூறுகிறது. தவறாயிருப்பின் மன்னித்துவிடுங்கள் ஐயா, நாங்கள் எவ்வாறு உங்களின் போதனைகளை நம்புவது?(வகுப்பு அமைதியாகிவிட. ஆசிரியரின் முகம் இருண்டுவிட்டது)

ஆசிரியர்: எனக்கு மூளை இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும் மகனே…

கலாம்: அதேதான் ஐயா… மனிதருக்கும் கடவுளுக்கும் இருக்கும் ஒரே இணைப்பு அதுதான், நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் நம் வாழ்வில் நம்மை வழிநடத்துகின்றது நாமனைவரையும் உயிருடனும் வைத்திருக்கின்றது.

5 கருத்துகள்:

KARMA சொன்னது…

அதெல்லாம் சரிப்பா......அப்துல் கலாம் மூளைய யாராச்சும் மோந்து பாத்தாங்களா?

அக்னி பறந்ததெல்லாம்வச்சு
அப்துல்கலாமுக்கு மூளை இருக்கு-னு
எப்டி நம்பரது....நீயே சொல்லு.

some people always say this explanation for GOD

"There is some super power I believe in, you may call it as nature or God or supream power or whatever"

தருமி அய்யா வலைபக்கத்தில் பாத்த சேதி ஒன்னு...

(The God Delusion by biologist Richard Dawkins) there comes the following.....

Carl Sagan put it well: ".....if by "God" one means the set of physical laws that govern the universe, then clearly there is such a God. This God is emotionally unsatisfying ..... it does not make much sense to pray to the law of gravity".

சரிதானுங்களே...!!!

மின்சாரம் ரொம்ப பவருள்ளதும், பலன் தருவதும் தான்....அதுக்காக ?
ஸ்வாமி ஓம்கார கூப்டு, அதுக்கு 4 கால அஷ்டோத்திர அர்சனை பண்ணலாமா?

போங்கப்பா.....நீங்களும் ஒங்க கடவுளும்.

நல்லா இருங்க சாமிகளா... புள்ளகுட்டிகளெ படிக்க வெய்ங்க, சொல்லிப்புட்டேன், அவ்வளவுதேன்.

நட்புடன் ஜமால் சொன்னது…

கடவுள் இருப்பை எப்படியாவது உணர்த்த முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றது இவ்வுலகம்.

நம்பும் வரை சொல்லிகிட்டேதான் இருக்கனும் ...

:)

seidhivalaiyam.in சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

அன்புடன் அருணா சொன்னது…

ஏற்கெனவே படிச்சிருக்கேனே!

சுரேகா.. சொன்னது…

ஆஹா... நல்ல உரையாடல்..!

BRAINSTORMING ங்கிறது இதுதான்!

நல்லா இருக்குங்க!