02 ஜூன் 2009

ஈழப் போராட்டத்தை பணமாக்கும் பாரதிராஜா!

இந்த படமாவது மக்கள் பார்க்கிற மாதிரியா இருக்குமா?

நிச்சயமாக இந்த படம் ஒருதலைபட்சமாக தான் இருக்கும். பிரபாகரனை ஒரு ஹீரோவாக தான் பாரதிராஜா காட்டுவார். பிரபாகரனால் தாய் தந்தையர்களை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், கணவன்மார்களை இழந்த பெண்கள் எத்தனை பேரென்று பாரதிராஜா அறிவாரா? பிரபாகரன் தமிழர்களுக்காக போராடவில்லை. அவர் தனக்காகவும் தனது பலத்தை பெருக்குவதர்க்காகவும் தான் தமிழர்களை பறிகொடுத்தார். அவரால் ஏற்பட்டதெல்லாம் அநியாயமும் அக்கிரமும் அழிவும்தான். இந்த 30 வருட யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை கேட்டால் உண்மை புரியும்.
ஈழத்தை பற்றி யார் சினிமா எடுத்தாலும் நல்ல பைசா பார்கலாம். ராசா தேர்தல் சமயத்தில் நல்லா ஓசி விளம்பரம் கொடுத்து எல்லோரையும் உசுப்பேத்தி வைத்துள்ளார். படம் எப்போ திரைக்கு வரும் என்று காத்திருக்கும் அளவுக்கு சூப்பர் வேலை செய்துள்ளார் ராசா. இந்த படத்தில் கிடைக்கும் முழு வருவாயையும் பாதிக்கப்பட்ட லங்கா தமிழர்களுக்கு கொடுக்க போவதாக சொல்லி தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க போகிறார் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் .

3 கருத்துகள்:

maac சொன்னது…

குத்தாட்டம் , காதல் ...மரத்த சுற்றி பாடறது ....
இத தாண்டி ஒருத்தர் ..... இப்போ தான்
அறிவு வந்து சினிமாவில் பதிவு பன்ன வந்து இருக்கார் ....
அதை கேவல படுத்தாதீர்.......
வாழ்த்துங்கள் ...

maac சொன்னது…

குத்தாட்டம் , காதல் ...மரத்த சுற்றி பாடறது ....
இத தாண்டி ஒருத்தர் ..... இப்போ தான்
அறிவு வந்து சினிமாவில் பதிவு பன்ன வந்து இருக்கார் ....
அதை கேவல படுத்தாதீர்.......
வாழ்த்துங்கள் ...

வேடிக்கை மனிதன் சொன்னது…

//இந்த படத்தில் கிடைக்கும் முழு வருவாயையும் பாதிக்கப்பட்ட லங்கா தமிழர்களுக்கு கொடுக்க போவதாக சொல்லி தமிழர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க போகிறார் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் .//

அவருக்கு உண்மையில் ஈழத்துப்பிரச்சினையை வைத்து பணம் பண்ணலாம் என்று நினைத்து இருந்தால் இந்த வார்த்தை அவருக்கு இடியாய் அமையும் என்பதில் அய்யம் இல்லை