19 மே 2009

LTTE கருணாவின் துரோகசெயலுக்கு இந்திய நாடும் தமிழக தமிழர்களுமா பொறுப்பு?


இந்தியர்களையும்,தமிழ் நாட்டு தமிழர்களையும் வாய்நிறைய வசை பாடும் எல்லோருக்கும் ஒருவார்த்தை.

புலிகளின் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்று,இன்று சிங்கள அரசில் அமைச்சராக அமர்திருக்கும் முன்னாள் புலி கருணாவை எல்லோரும் வசதியாக மறந்துவிட்டு வீணாக எங்களையும் என் நாட்டையும் வசைபாடுவதை எதில் சேர்ப்பது? புலிகளின் முன்னாள் நிலை என்ன?

இன்று எப்பிடி இந்த அளவு ஒடுக்கப்பட்டார்கள்? முன்னாள் LTTE கருணாவின் துரோகசெயலுக்கு இந்திய நாடும் தமிழக தமிழர்களுமா பொறுப்பு? தோன்றுவதை பேசுவதோ,எழுதுவதோ சரியல்ல.

தயவு செய்து திருந்துங்கள் மேதைகளே. எங்களுக்கு அடுத்த தமிழர் தலைமுறைகளை இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்ள செய்யுங்கள். ஒரு தமிழினத்தை அழித்த நாடு எனும் நினைப்பை ஏற்படுத்திவிடாதீர்கள்.

காலம் நம் முன்னே நமுட்டுச் சிரிப்புடன் இரு விரல்களை நீட்டுகிறது. ஒன்று, “வாழ்க, வாழ்க” என்று கோஷமிட்டுக்கொண்டே வாழ்ந்துவிட்டுப் போகலாம். இரண்டு, “ஒழிக, ஒழிக” என்று கத்திக்கொண்டே ஒழிந்து நாசமாய்ப் போகலாம்.

இந்த நியூஸ் கேட்டு எத்தனை பேரு தீ(டீ)க்குளிக்கப் போரானுகளோ. அப்படி எதுவும் நடக்காமல் இருக்க மக்களுக்கு அறிவுரை சொல்லுங்க நண்பர்களே!!

10 கருத்துகள்:

கொழுவி சொன்னது…

கருணாவிடம் கொடுப்பதற்கு வண்டி வண்டியாக ஆயுதங்களும் உளவு பார்ப்பதற்கு செயற்கைகோள்களும் ராடர்களும் இருந்ததா..?

//ஒரு தமிழினத்தை அழித்த நாடு எனும் நினைப்பை ஏற்படுத்திவிடாதீர்கள்.//

இதுதானே உண்மை. ஒவ்வொரு ஈழத்தமிழனும் தன் சந்ததி முழுமைக்கும் இந்தியா ஒரு நாசகார நாடு என்பதை சொல்லியே வளர்ப்பான்.

கார்த்திக் சொன்னது…

இந்த போரை நடத்தியதே இந்தியாதான்
வசதியாக யாரும் யாரையும் மறக்க மாட்டார்கள்.
ஒரு மாவீரனுடைய காலகட்டத்தில் வாழ்ந்தோம் என்பதில் பெருமை கொள்வோம்
அவனை அழித்தது நாம்தான் என சிறுமை கொள்வோம்

புதுகைச் சாரல் சொன்னது…

கார்த்திக்
தொழிற்துறை: தொழில்நுட்பம்
தொழில்: Network
இருப்பிடம்: Dubai : Dubai : United Arab Emirates
என்னைப் பற்றி
நான் யாரு? எனக்கேதும் தெரியலையே..?????

கண்ணா.. சொன்னது…

எங்களை கொஞ்சம் நிம்மதியாக அழவிடுங்கள்!

குசும்பன் சொன்னது…

மரணத்தின் பிடியில் இருந்தவர்களுக்கு இந்த தலைவர்கள் என்ன செய்து கிழித்தார்கள்? மனசாட்சிப்படி சொல்லுங்கள் இந்திய அரசு நினைத்திருந்தால் தடுத்து நிறுத்தி இருக்கமுடியும்.

கண்டிப்பாக வெட்கப்படவேண்டியதுதான். அவர்கள் திட்டுவதில் எந்த தவறும் இல்லை!

தங்கள் ஒரே ஒரு நம்பிக்கையும் இறந்துவிட்டது என்ற செய்தி கேட்டு துன்பத்தில் இருக்கும் அவர்கள் திட்டட்டும் அதுதான் அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

King... சொன்னது…

ஏதாவது எழுதியே ஆகணும்னா அதற்கு நிறைய விசயங்கள் இருக்கு...ஏனிந்த....##$#$#|\*#@

தீப்பெட்டி சொன்னது…

அவர்கள் திட்டட்டும்...

supersubra சொன்னது…

//இந்தியர்களையும்,தமிழ் நாட்டு தமிழர்களையும்//

They (Eelam Tamilians) may be using different words. But it always point to Indian politicians and particularly Tamilnad politicians (who have betrayed for remaining in power). We as normal citizens can atleast sympathize with them and pray for a peaceful / respectful life hereafter. If the root cause of the problems is not removed then this is not the end of war.

புதுகை தோட்டம் சொன்னது…

loose

புதுகை தோட்டம் சொன்னது…

koduma