02 ஏப்ரல் 2009

இந்திய ஜனநாயகத்தின் தூண்களே!!

செய்வோம் அல்லது செத்து மடிவோம் ! தமிழனால் முடியாதது எதுவுமில்லை! தமிழனுக்கு முடியாதது எதுவுமில்லை!! தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க!! தமிழர் நலம் வாழ்க!!! தமிழ்நாடு வாழ்க!!!! எல்லோரும் சமம்! எல்லாமும் சமம்!! எல்லோர்க்கும் சமம்!!!
1. தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும். புகைப்படம் மற்றும் கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். பெற்றோர் விபரம், சொத்து விபரம், வருமானம் மற்றும் அனைத்து விபரங்களும் இதில் இருக்க வேண்டும். அனைத்து சேவைக்கும் இதுவே போதுமானது.
2. இரண்டு குழந்தைக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசாங்க உதவிகள், வேலை வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.
3. அனைத்து மாவட்டத்திலும் 10,000 பேர் ஒரே இடத்தில் வசிக்க கூடிய நகரம் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்த அனைத்து தமிழனுக்கும் வீடு கட்ட 10 முதல் 25 சென்ட் நிலம் இலவசமாக வழங்க வேண்டும். 10 சென்ட் நிலம் இல்லாமல் ஒரு தமிழ் குழந்தை பிறக்கவும் கூடாது, 10 சென்ட் நிலம் இல்லாமல் ஒரு தமிழன் இறக்கவும் கூடாது. இந்த நிலம் விற்கவோ, வாங்கவோ அல்லது பிரிக்கவோ அனுமதிக்கக் கூடாது. அடிப்படை வசதிகள் அனைத்தும் இங்கு செய்து கொடுக்க வேண்டும். கண்ட கண்ட இடத்தில் வீடுகள் இருந்தால், இன்னும் 1000 வருடம் ஆனாலும் அடிப்படை வசதிகள் செய்துக் கொடுக்க முடியாது. இதனால் விளை நிலங்கள் வீடாவதை தவிர்க்கலாம். வயல் மற்றும் விளை நிலங்கள் வீடுகள் ஆவதை தவிர்க்க வேண்டும்.
4. ஒரு குடும்பத்திற்கு 5 ஏக்கர் நிலத்திற்கு மேல் நிலம் வைக்க அனுமதிக்க கூடாது. பிரதான சாலை ஓரத்தில் ஒரு ஏக்கருக்கு மேல், ஒரு தனி நபர் வைக்க அனுமதிக்கக் கூடாது. அரசு போடும் சாலை அனைத்தும் அனைவருக்கும் பயன்பட வேண்டும். அதிகமான நிலத்தை அரசு கையகப்படுத்தி நிலம் இல்லாதவருக்கு வழங்க வேண்டும். இலவசமாக அரசு கொடுக்கும் நிலத்தை விற்கவோ வாங்கவோ அனுமதிக்கக் கூடாது. நிலத்தை குடியிருப்பு நிலம், விளை நிலம், வயல் நிலம் மற்றும் தொழிற்ச்சாலை நிலம் என பிரிக்க வேண்டும். நிலங்கள் அதன் பிரிவிற்கேற்ப பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
5. கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு மட்டும் அரசாங்க வேலை கொடுக்க வேண்டும்.
6. அனைத்து சாலைகளுக்கும் 5 வருட உத்ரவாதம் மற்றும் 5 வருட பராமரிப்பு, சாலை போடும் நிறுவனமே செய்ய வேண்டும்.
7. அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் 5 வருட உத்ரவாதம் அல்லது 5 வருட இலவச பராமரிப்பு, பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமே வழங்க வேண்டும். 5 வருடம் உத்ரவாதம் இல்லாத பொருட்கள் அனைத்தும் தடைசெய்யப்பட வேண்டும்.
8. நதிகள் அனைத்தும் தேசிய மயமாக்க வேண்டும். மத்திய அரசு நதி நீரை பங்கிட்டு அணைகளை பராமரிக்க வேண்டும்.
9. நமது இயற்கை வளம் அனைத்தும் பயன்ப்படுத்த வேண்டும். இளநீர், கள் மற்றும் அனைத்து பானங்களும் பதப்படுத்தி குப்பியில் அடைத்து விற்க வேண்டும்.
10. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பேருந்து நிலையம், ஒரு சந்தை, ஒரு காவல் நிலையம், ஒரு விளையாட்டு அரங்கம் ஒரு படிப்பகம் அனைத்தும் ஒரே இடத்தில் அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதியிலும் இது ஒரே விதமாக ஒரே வடிவத்தில் அமைய வேண்டும்.
11. ஒரு மாவட்டத்திற்கு ஒரு கண்காட்சி அரங்கம் அமைக்க வேண்டும். அனைத்து பொருட்களின் கண்காட்சியும் வருடம் முழுவதும் இங்கு நடத்தலாம்.
12. தனியார் பேருந்து மற்றும் வாடகை வண்டிகள் அனைத்தும் 10 வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
13. சுகாதாரம் இல்லாத ஹோட்டல், உணவு விடுதிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
14. அனைத்து பேருந்து நிலையத்திலும் கழிவறை சுத்தமாக பேண வேண்டும். பயணிகளுக்கு சுத்தமான குடிநீர் இலவசமாக கொடுக்க வேண்டும். தொண்டு நிறுவனம் அல்லது பெரிய கம்பெனி மூலம் இதை நிர்வாகப் படுத்தி, இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கம்பெனி விளம்பரங்கள் வைத்து செலவு ஈடு கட்டலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலைய கழிவறைகளும் மிகவும் மோசமாக உள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் மாதம் ஒரு முறை கண்காணிப்பது நல்லது. அனைத்து பேருந்து மற்றும் பேருந்து நிலையத்தை இரவு நேரத்தில் சுத்தப்படுத்த வேண்டும்.
15. பேருந்துகளில் ரீசார்ஜ் கார்ட் மூலம் பயணசீட்டு கொடுக்கும் நடைமுறையை அமல்ப்படுத்த வேண்டும். இதனால் சில்லறை பிரச்சினைய்யை தவிர்க்கலாம். பேருந்து, பேருந்து நிலையம் மற்றும் பயணசீட்டுகளில் விளம்பரம் செய்து பேருந்து கட்டணத்தை குறைக்கலாம்.
16. வியாபாரம் பண்ணுவது அரசின் கடமை அல்ல. நல்ல நிர்வாகம் பண்ணுவது தான் அரசின் கடமை. முடிந்தவரை தனியாரிடம் விட்டு விட்டு நல்ல நிர்வாகம் பண்ண வேண்டும்.
17. இரண்டு தடவைக்கு மேல் முதல்வர் ஆகவோ, மந்திரி ஆகவோ, பாராளுமன்ற உறுப்பினர் ஆகவோ, சட்டமன்ற உறுப்பினர் ஆகவோ இருக்க கூடாது. 75 வயதுக்கு மேல் அரசு பதவிகள் வகிக்க கூடாது. கடைசி வரை கட்சிப்பணி செய்யலாம்.
18. பொது சேவை செய்யும் அரசியல்வாதிகள், அரசு ரேசனில் கொடுக்கும் உணவை உண்ண வேண்டும். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க வேண்டும். அவர்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும். இதனால் அரசு நடத்தும் நிறுவனங்களின் தரம் உயரும். அப்படி செய்யாத அரசியல்வாதிகளை தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும்.
19. ஆறு, ஏரி மற்றும் குளங்கள் அனைத்தும் நன்றாக ஆழப்படுத்தி சுவர் எழுப்பி பராமரிக்க வேண்டும். பாசன வசதி பெறும் இடங்களில் வீடுகள் மற்றும் ஆலைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.
20. விவசாயிகளுக்கு விவசாய நிலத்திற்கேற்ப வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். கல்வி கற்க வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.
21. சாலைகள் அனைத்தும் தனியார் நிறுவன பங்களிப்போடு செய்ய வேண்டும். ஒரு கிலோ மீட்டர் சாலை செய்ய ஆகும் செலவை தரும் தனியார் நிறுவனங்களுக்கு, அந்த நிறுவனத்தின் விளம்பர பலகையை அந்த சாலையில் வைக்க அனுமதிக்க வேண்டும். சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவுகள் அனைத்தும் நீக்க வேண்டும். அபாயகரமான வளைவுகளால் அப்பாவி உயிர்கள் பறிபோகக் கூடாது. சாலைகள் அனைத்தும் சர்வதேச தரத்துக்கு மாற்ற வேண்டும்.
22. எதையும் இலவசமாக கொடுக்கக் கூடாது. குறைந்த விலை அல்லது மானியம் வழங்க வேண்டும். நல்ல தரமான பொருட்கள் பெட்டியில் அடைத்து ரேசன் கடைகளில் விற்க்கலாம்.
23. ஒரு பஞ்சாயத்துக்கு ஒரு படிப்பகம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் ஒரே வடிவத்தில் இது அமைய வேண்டும். இதனால் பராமரிப்பு செலவு குறையும்.
24. முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்க்கு மறு வாழ்வு மையம் அமைக்க வேண்டும். பிச்சை எடுப்பதை தடை செய்ய வேண்டும். பிச்சையில்லாத, வறுமையில்லாத தமிழ்நாடு அமைய வேண்டும். 25. தமிழ்நாட்டின் தலைநகரத்தை திருச்சிக்கு மாற்ற வேண்டும். இன்று சொல்வோம்! நாளை செய்வோம்!! நமக்காக அல்ல! நாளைய தலைமுறைக்காக!!

2 கருத்துகள்:

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

இய‌ற்கை சொன்னது…

ந‌ல்லாத்தான் இருக்கு...ஹ்ம்ம்ம்ம்ம்ம்