ஆனால் உண்மையிலேயே அந்த சொத்துக்கு அந்த மதிப்பு இருக்கிறதா?- என்று யாரும் பார்ப்பது இல்லை.
இப்படி இல்லாத ஒரு மதிப்பை உருவாக்கி விட்டு, 'எல்லோரும் கூறுகிறார்கள்' என்று அந்த பங்கை, பொருளை வாங்கி விட்டு , பின்னர் அதன் விலை சரியும் போது- நம் பணம் காணாமல் போகிறது.
என்னைப் பொருத்தவரை, எந்த ஒரு பொருளும் தேவைக்கு மிக அதிகமாக உருவாக்கப் பட்டால் அது மதிப்பு இழக்கும் நிலை உருவாக்கும். தேவைக்கு அதிகமாக எதற்க்கு வாங்க வேண்டும்?தங்கத்தின் விலை ஏற வேண்டும் என்று நாம் விரும்பவில்லை. ஏழை எளியவர் வீட்டுத் திருமணங்கள் நடை பெறும்போது எவ்வளவு கஷ்டம் என்று நமக்குத் தெரியும்.
தங்கம் என்பது பொருளாதாரத்துக்கு எதிரி அல்ல. அது ஒரு பணம். டாலர், யூரோ, ரூபா போல அதுவும் ஒரு பணம். அமெரிக்க பொருளாதாராம் சரிந்தால், உடனே 1000 பில்லிய னுக்கு டாலரை அச்சு அடித்து தள்ளுகின்றனர்-டாலர், தெருவிலே மிதி பட்டால் யார் அதை மதிப்பார்கள்? இவை எல்லாமே உருவாக்க பிரிண்ட்டர், மை, பேப்பர் இருந்தால் போதும். ஆனால் தங்கத்தை அப்படி எந்த ஒரு அரசாங்கமும் உருவாக்க முடியாது! அதனால் தான், சோழர், கிரேக்கர் காலம் முதல் தங்கத்தை பணமாக பயன் படுத்தி வந்தனர்!
ஆம் தங்கத்தை புறக்கனியுங்கள் மாற்று அணிகலன் அணியுங்கள்
உலகிலேயே அதிக அளவு தங்கம் கிடைக்கும் நாடு ஆப்ரிக்கா தான் ஆனால் அந்த நாடு இன்னும் வறுமையின் பிடியில் தான் உள்ளது பணகார நாடுகள் அங்கு தங்களின் ஆதிக்கத்தை செலுத்தி கொள்ளை அடிக்கின்றனர் ஒரு கிராம் தங்கம் எடுக்க ஒரு டன் மணலை கெமிக்கல் கலந்து சலிகின்றனர் அந்த மண்ணில் மறுபடியும் எந்த ஒரு தாவரமும் வளராது
8 கருத்துகள்:
இது செயற்கையான ஊதல். பொறுமையாக இருங்கள் பெட்ரோல் விலை போல இதுவும் சுருங்கிவிடும் விரைவில்.
என்னாபா மேட்டரு ...
//இது செயற்கையான ஊதல். பொறுமையாக இருங்கள் பெட்ரோல் விலை போல இதுவும் சுருங்கிவிடும் விரைவில்.//
அதெப்படிங்க சுருங்கும்!
டீசல் விலை அதிமானப்போ 2 ரூவா ஏத்துன ஷேர் ஆட்டோ சார்ஜே குறைஞ்ச பாடில்லை!
தங்கம், கிரவுண்ட், நிலம் விலையெல்லாம் கூடுறப்போ கூடுறதுதான்!
திரும்ப குறையும் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்புக்கு(லுலூங்காட்டி) பேருக்கு கொஞ்சம் குறையுமே அன்றி பழையபடியெல்லாம் குறைய சான்சே இல்லை!
இன்னாபா யாரையும் கானோம்
நட்புடன் ஜமால் கூறியது...
இன்னாபா யாரையும் கானோம்
பொறுமையாக இருங்கள்
//நட்புடன் ஜமால்
என்னாபா மேட்டரு//
சும்மா
வாங்க ஜமால் and Shibi
பொருமையா -
அது தெரியாமா வாழ்க்கை இப்படி போகுது ...
கருத்துரையிடுக