13 பிப்ரவரி 2009

தங்கம் கொள்ளை அடிக்கின்றனர்

இனி சாமான்ய மக்களால் தங்கம் வாங்கவே முடியாதோ என ஏக்கப்பட வைக்கும் அளவுக்கு தங்கத்தின் விலை நேற்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து, ஒரு பவுன் ரூ.10,672க்கு விற்பனையானது.
கடந்த ஜனவரி 24ம் தேதி ஒரு கிராம் தங்கம் ஆயிரத்து 301 ரூபாய்க்கும், ஒரு பவுன் ரூ. 10,408க்கு விற்பனையானது.இதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை எக்கச்சக்கமாய் ஏறுவதும், பின்னர் சற்றே குறைவதுமாக கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 1,312க்கு விற்பனையானது.
உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, முதலீட்டுதாரர்கள் பத்திரமான முதலீடு என்ற கணக்கில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது என்கின்றனர்.
- நமது பேராசை, முட்டாள்தனத்தினால். இன்னும் ஆரம்பிக்காத ஒரு கம்பெனி, திட்ட அளவில் இருக்கிறது- பங்கை வெளியிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்- 100 ரூபாய் மதிப்புள்ள பங்கை-5000 ரூபாய்க்கு சந்தையில் அறிமுகம் செய்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். அதாவது 50 மடங்கு மதிப்பு அதிகம் என்று கூறி வைத்து வெளியிடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்
இன்னும் ஆரம்பிக்காத ஒரு நிறுவனம்- அதன் மதிப்பு 50 மடங்கு உயர்ந்தது என்பது எப்படி சாத்தியம்? ஆனால், நாம் 5000 ரூபாய்க்கு வாங்கலாம், வேறு ஏதாவது கேணையன் அதை 7000 ரூபாய்க்கு வாங்குவான் என்று முட்டாள்தனம், பேராசையில் வாங்கு கின்றனர். இதுவா தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பை உருவாக்கும்? தலையில் துண்டு போட்டுக் கொள்ள துண்டு தாயாரிக்கும் வேலை வாய்ப்புதான் பெருகும்!

கருத்துகள் இல்லை: