09 அக்டோபர் 2008

தங்கத்தை நினைத்து ஏழைகள் ஏங்க மட்டுமே முடியும்.



பணக்காரர்கள் மட்டுமே வாங்கும் பொருளாக ஆகிவிட்ட தங்கத்தை நினைத்து ஏழைகள் ஏங்க மட்டுமே முடியும். எத்தனையோ பெண்கள் வரதட்சணை கொடுக்க வழியின்றி முதிர்கன்னிகளாக இருக்கின்றனர்.




இந்த நிலையில் ஒவ்வொரு தமிழனும் வரதட்சணை வாங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும். தங்கத்தை வாங்கி முடக்குவது பொருளாதார வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கிவிடும்.


அன்பான பணக்காரர்களே தங்கத்தில் முதலீடு செய்யாதீர்கள். அந்தப் பணத்தைக் கொண்டு சிறு தொழில் தொடங்கி பத்து பேருக்காவது வேலை கொடுங்கள். ஒவ்வொருவனும் தன்மானத்தோடு வாழ்வான். வெளிநாடுகளில் சென்று கொத்தடிமைகளாக வாழவேண்டும் என்று எவனும் ஆசைப்பட மாட்டான்.


இந்தியா உயர வேண்டுமானால் பணத்தைப் பதுக்காமல் தொழிலில் முதலீடு செய்யுங்கள் எல்லாருக்கும் வேலை கிடைக்கும். எல்லாரும் தங்கம் வாங்குவார்கள். எங்கள் தமிழ்க்குலப் பெண்களுக்குத் திருமணமும் நடக்கும் ப்ளீஸ்.


பதிவு செய்தவர்: அருண் பதிவு செய்தது: 09 Oct 2008 11:59 am

2 கருத்துகள்:

புதுகைச் சாரல் சொன்னது…

சின்னபொடி வருகைக்கு நன்றி.

புதுகை.அப்துல்லா சொன்னது…

எங்கள் தமிழ்க்குலப் பெண்களுக்குத் திருமணமும் நடக்கும் ப்ளீஸ்.

//

:)