20 மார்ச் 2011

ஆசைநாயகி பட்ஜெட் ????

ஓஹோ,இதுதான் கதாநாயகி பட்ஜெட்டோ ?ஆனால் ஆசைநாயகி பட்ஜெட் போல நியாயங்களுக்கு எதிராக அல்லவா உள்ளது.இன்னும் போனால் அரசியல் வாதிகள் போல எல்லாருக்கும் சின்ன வீடு கூட செட் அப் செய்து தருவார்கள் போல இருக்கு.சீ ..இந்த மானம் கெட்ட பொழைப்பு வேணுமா?
தலைவர் இன்னொரு முக்கியமான இலவசத்தை மறந்துட்டாரு அது என்னென்னா குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கொடுக்கப்படும்...அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்து மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளிவிட்டது. இவ்வளவு கேவலமான அரசியலை நம் நாட்டை தவிர வேறு எங்கும் பார்க்கமுடியாது. பணநாயகம் கோர தாண்டவம் ஆடுது. ஜனநாயகம் அழுவுது!!!

மக்கள் வரி பணத்துல பொருள்கள் இலவசமா குடுக்கறதுக்கு இவங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சேவைகள இலவசமா கொடுங்க. மருத்துவம்,கல்வி,பஸ் பிரயாணம், மின்சாரம், காப்பீடு, அந்திம கிரியை, ஆகியவை சேவை இலவசமா தரலாம். ஊழல் பொருளின் தரம் இவைகள் எங்கள் வரிபணத்தை வீணாக்கும் செயலாகும்

பசியால் வாடுகின்ற குழந்தைக்கு தாய்ப்பால் வழங்காமல் சர்க்கரையை நாக்கில் தடவிக்கொடுப்பதை போன்ற திட்டங்களை கொண்ட தேர்தல் அறிக்கை.

அடித்தட்டு மக்கள் என்பவர்கள் சோம்பேறிகளாகவும் பொருப்பற்றவர்களகவும் இருக்கும்வரை இந்தமாதிரி கொள்ளையர்கள் இருப்பார்கள். அவர்கள் எப்போது பொறுப்பான உழைப்பாளிகளாக மாறுகிறார்களோ அப்போதுதான் இந்தமாதிரி சுயநலவாதி திருடர்கள் காணாமல்போவர்கள்

1 கருத்து:

Unknown சொன்னது…

talaippu--serupadi..................
ennai ponravarkal oru nalaikku 16 mani nerm uzhaithu vazhvil munnuku vara poradukirom. vari kattukirom.velai seiyamal vettiaka pozhuthai pokkum somberikalukku ilavasam........thalaiezhutthu