11 மார்ச் 2009

தாயுள்ளம் படைத்த தேவதையே.........,


கடந்த ஐந்து வருட காலமாக இலங்கை தமிழர்கள் நலன் குறித்து வாய் திறக்காத காங்கிரசும், தி.மு.க.வும் இணைந்த மத்திய அரசு, இலங்கை ராணுவத்திற்கு ஆயுத உதவியும், பயிற்சியும் அளித்து வந்த மத்திய அரசு, 2008-ம் ஆண்டு போர் தீவிரமடைந்த போது வேடிக்கைப் பார்த்த மத்திய அரசு, நான் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று அறிந்தவுடன், அதே நாளில் உள் நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு 25 டன் மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் விமானம் மூலம் அவசரம் அவசரமாக அனுப்பியுள்ளது...

எது எப்படியோ, நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதன் காரணமாக, நான் இந்த பிரச்சினையில் தலையிட்டதன் காரணமாக, மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு இந்த உதவியை இப்போதாவது செய்திருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு நன்மை ஏற்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தாயுள்ளம் படைத்த தேவதைே........., தரணி ஆள வந்த தாரகையே.......,

தமிழ் மக்களின் வாழ்வில் இருளை அகற்றி ஒளிஏற்ற வந்த ஒளி விளக்கே........,

அம்மா இலங்கை மக்கள் உங்களைத்தான் நம்பி இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

6 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

இதெல்லாம் கொஞ்சம் ஓவரு!

அபுஅஃப்ஸர் சொன்னது…

//அம்மா இலங்கை மக்கள் உங்களைத்தான் நம்பி இருக்கிறார்கள் அவர்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்./

ஹா ஹா

அபுஅஃப்ஸர் சொன்னது…

//எது எப்படியோ, நான் உண்ணாவிரதம் மேற்கொண்டதன் காரணமாக, நான் இந்த பிரச்சினையில் தலையிட்டதன் காரணமாக, மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு இந்த உதவியை இப்போதாவது செய்திருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு நன்மை ஏற்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் ஜெயலலிதா//

பவர்ஃபுல் வுமண் என்பது இவுகதானோ

அபுஅஃப்ஸர் சொன்னது…

இந்த பதிவு மெய்யாலுமே புகழ்ச்சியா இல்லே...?

ஒன்னுமே புரியலே இந்த மண்டைக்கு.. ஹி ஹி

புதுகைச் சாரல் சொன்னது…

“அனைத்துக் கட்சி கூட்டம், சட்டசபை தீர்மானம், மனிதச் சங்கிலி, எம்.பி.க்கள் இராஜினாமா, பிரதமரைச் சந்தித்தல்’ என கண் துடைப்பு நாடகங்கள் தான் கருணாநிதியால் இதுவரை நடத்தப்பட்டதே தவிர, இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான எந்தவித உருப்படியான நடவடிக்கையும் கருணாநிதியாலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாலும் எடுக்கப்படவில்லை.

சுல்தான் சொன்னது…

இரண்டு மூன்று சிரிப்பான் போடாம எழுதி இருக்கீங்க.