மதிப்பபிற்குரிய தமிழக முதல்வர் அவர்களே..
தங்களுடைய ஆழ்ந்த அரசியல் அனுபவம், அசாதிய அறிவாற்றல், பேச்சாற்றல் இவற்றை நல்ல முறையில் உபயோகித்திருந்தால், தமிழ் நாட்டிற்க்கு மட்டுமல்ல நம் இந்திய திருநாட்டிற்க்கே நன்மை மற்றும் பெருமை தந்திருக்கும்.
இது பள்ளிகூட வகுப்பறை அல்ல.. மற்றவர்கள் மீது பழி போடுவதற்க்கு.. உங்களை தாக்கும் ஒவ்வொரு அறிக்கைக்கும் எதிர் அறிக்கை தந்து நேரத்தை வீணாக்காமல், செயலில் காட்டுங்கள். நம் அண்டை மாநிலங்களுடன் சச்சரவு, தீராத பிரச்சனைகள், மாநிலத்தினுல்லே மீனவர் பிரச்சனை, மின்சார பிரச்சனை இது போன்று பல பிரச்சனைகள் உள்ளது.. தயவு செய்து இவைகளில் நேரத்தை உபயோகமாக செலவு செய்து மக்களுக்கு சிறிதேனும் நல்லது செய்யுங்கள்.
கோப்புகளை பைசல் செய்வதும், வளர்ச்சித்திட்டங்களை உரிய முறையில் கருவாக்கி செயல்படுத்துவதும் முதல்வராகிய தங்களின் பணி. இதில் தற்பெருமைக்கு ஏது இடம்? இதற்காகத்தான் ஆறு கோடி மக்களும் உங்களைத் தங்களின் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஊழலை இன்னமும் ஒழித்தபாடில்லை. தங்களின் வளர்ச்சித்திட்டங்கள் யாவும் அடித்தட்டு மக்களைச் சென்றடைய வழிவகை செய்யுங்கள் முதல்வரே.
2 கருத்துகள்:
அரசியல் தலைவர்களே, அரசியல்வாதிகளே அவ்வப்போது கொஞ்சம் மக்களுக்காகவும் சிந்தியுங்கள், செயலாற்றுங்கள்.
யாராவது பின்னூட்டம் போடுங்கய்யா.. போடுங்கம்மா...
கருத்துரையிடுக